வீட்டுக்குள் புகுந்து பிரபல நடிகையிடம் கத்திமுனையில் ரூ.6 லட்சம் கொள்ளை - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை அலங்கிரிதா சஹாயிடம் கத்திமுனையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரபல இந்தி நடிகை அலங்கிரிதா சஹாய், 10 நாட்களுக்கு முன் பெற்றோர்கள் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனிடையே அவர் வேலைக்காரப் பெண் வருவதற்காக வீட்டின் வாசல் கதவைத் திறந்து வைத்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென்று வீட்டுக்குள் நுழைந்த 3 மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அலங்கிரிதாவிடம் ஏடிஎம் கார்டை பறித்துள்ளனர்.3 பேரில் ஒருவன் நம்பரை வாங்கிக்கொண்டு அருகில் உள்ள ஏடிஎம் மையம் சென்று ரூ.20 ஆயிரம் எடுத்து வந்தான்.
பிறகு மீண்டும் பணம் கேட்டு மர்மநபர்கள் மிரட்ட தன்னிடமிருந்த ரூ.6 லட்சம் பணத்தை அவர்களிடம் வீசிவிட்டு பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.பணத்தைக் கைப்பற்றிய மர்ம நபர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பியோடினர்.
இதனையடுத்து நடிகை அலங்கிரிதா சஹாய் போலீசில் புகார் அளித்தார். அதனைடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அலங்கிரிதா சஹாய் சில தினங்களுக்கு வீட்டிற்கு பர்னிச்சர்களை வாங்கியுள்ளார்.
அதை வீட்டுக்கு கொண்டு வந்தவர்களில் ஒருவன் கொள்ளையடித்த கும்பலில் இருந்ததாக அவர் தெரிவித்த தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.