ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அலங்காநல்லூர் : கால்கோள் ஊன்றும் விழா தொடக்கம்
உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியின் முக்கிய நிகழ்வான கால்கோள் ஊன்றும் விழா கிராம மக்கள் முன்னிலையில் தொடங்கியது.
மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிகட்டு போட்டிகள் தை பொங்கலை முன்னிட்டு ஜனவரி-14. அவனியாபுரத்திலும் ஜனவரி-15. பாலமேட்டிலும் ஜனவரி-16. அலங்காநல்லூரிலும் வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு போட்டி ஜனவரி 16ம் தேதி நடை பெறவுள்ள நிலையில் இன்று காலை அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் ஜல்லிகட்டு போட்டிக்கான பணியின் முக்கிய நிகழ்வான கால்கோள் விழா நடைபெற்றது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் பீடத்தின் முன் அலங்காநல்லூர் ஜல்லிகட்டுவிழா கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் ஜல்லிகட்டு போட்டி தொடங்குவதற்கான கால்கோள் ஊன்றும் விழா எளிமையாக நடைபெற்றது.
இந்தாண்டு அரசு கூறும் வழிமுறைகள்படி முறையாக நடைபெறும் ஜல்லிகட்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்க காசு பரிசாக வழங்க உள்ளோம் தமிழக அரசு என்ன அறிவிப்பு வழிமுறைகளை கூறுகிறதோ அதன்படி ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும் என விழா கமிட்டி தலைவர் ரகுபதி கூறினார்.