அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; இன்று கால்கோள் நடப்பட்டது

Thai Pongal Madurai
By Thahir Jan 06, 2023 06:05 AM GMT
Report

ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று கால்கோள் நடுதல் விழா நடைபெற்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரையில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தை முதல் நாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

இதில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஜனவரி 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; இன்று கால்கோள் நடப்பட்டது | Alankanallur Jallikattu Preparations Are Swing

இதனை ஒட்டி இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் நடுதல் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.