வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு - அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி

murder madurai alanganallur
By Anupriyamkumaresan Nov 29, 2021 06:54 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

அலங்காநல்லூர் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கட்டையால் அடித்துக் கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வயலூர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி மருதுபாண்டி (55) இவரது வயல் அருகே அவரது தம்பி சுரேஷுக்கு சொந்தமான வயல் உள்ளது.

இந்த நிலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சகோதரர்களுக்கிடையே கடந்த சில நாட்களாகவே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், மருதுபாண்டி தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முயன்ற போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது.

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு - அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி | Alanganallur Brother Killed Elder Brother

இதையடுத்து ஆத்திரத்தில் சுரேஷ், தனது அண்ணன் மருதுபாண்டியை உருட்டுக் கட்டையால் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த அண்ணன் மருதுபாண்டியன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து சுரேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சமயநல்லூர் காவல் துறையினர் தப்பியோடி தலைமறைவாக இருந்த அவரது தம்பி சுரேஷை; கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.