கூட்டணியில் இழுபறி: கே.எஸ்.அழகிரி கண்ணீர்

election alagiri indian
By Jon Mar 05, 2021 12:11 PM GMT
Report

திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமாக இருப்பதாக என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக, திமுக தங்களது கூட்டணியை உறுதிப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் திமுக தனது கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

ஆனால், காங்கிரஸ் திமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணீர் ததும்பபேசியது சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை பெற்று வருகிறோம், இந்த முறை குறைந்த இடம் பெற்றால் அடுத்த முறை பேசுவதற்கு கூட இடம் இருக்காது.

என பேசியுள்ளாராம். திமுக அளிக்கும் தொகுதிகள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது. என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய அழகிரி . இந்த முறை விட்டுக்கொடுக்கலாம். ஆனால், கட்சி இல்லாமல் போய்விடும்.தன்மானம் சுய கெளரவம்தான் முக்கியம் என செயற்குழுவில் கண்ணீர் மல்க பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.