விலைவாசியை கட்டுபடுத்த மத்திய,மாநில அரசுகள் முயற்சிக்கவில்லை - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
விலைவாசியை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ஆதரவாக அத்தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு எந்த சிறப்பு நிதியும் பெறவில்லை. ஒரே மொழி, ஒரே மதம் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் கொள்கை' என மத்திய பாஜக அரசை விமர்சித்து பேசினார்.