அட்சய திருதியை: ஒரே நாளில் 60 கிலோ தங்கம் விற்பனை - எங்கு தெரியுமா?
அட்சய திருதியை நாளில் சிறப்பு விற்பனையாக சுமார் 60 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அட்சய திருதியை
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் அன்று தங்கம் வாங்குவது பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாடப்படுகின்றது.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அட்சய திருதி 2 நாட்களாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு நகை கடைகளிலும் தள்ளுபடி விற்பனை செய்யப்பட்டது. அதனால் நேற்றும், இன்றும் நகை கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
அமோக விற்பனை
இதனை தொடர்ந்து கோவையில் நேற்று ஒரே நாளில் 60 கிலோ எடை கொண்ட தங்கம் ரூ. 36 கோடிக்கு விற்பனை செய்யபட்டது. கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு தங்கம் விற்பனை சிறப்பாக நடந்து வருகிறது.
தங்கம் விலை நேற்று ஒரு சவரன் ரூ.44,840க்கு விற்பனை ஆனது.
இதனை குறித்து பேசிய மக்கள்," விலை அதிகரித்தாலும் தங்கத்தில் முதலீடு செய்தால் அது எந்த காலத்திலும் பயன் தரும்" என்றும், மேலும் இந்நாளில் தங்கத்தில் முதலீடு செய்தால் செல்வம் பெருகும் என்றும் கூறியுள்ளனர்.