இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்ஷய் குமார் - எதற்காக கனடா குடியுரிமை பெற்றார் தெரியுமா?
இந்திய குடியுரிமை பெற்றுவிட்டதாக நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அக்ஷய் குமார்
அக்ஷய் குமார் 1967ல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார். இவர் இதுவரை 90க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 என்ற படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
அண்மையில் இவர் நடிப்பில் ஓஎம்ஜி 2 என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்த 2000ம் ஆண்டு கனடா குடியுரிமையை அக்ஷய் குமார் பெற்றார். இதற்காக சமூக வலைத்தளங்களில் 'என்னதான் இந்திய படங்களில் நடித்தாலும் இந்திய குடியுரிமை இல்லாதவர் என்ற கடுமையான விமர்சனங்களுக்கு அக்ஷய் குமார் உள்ளானார்.
கனடா குடியுரிமை குறித்து நேர்காணல் ஒன்றில் அவர் அளித்த பேட்டியில் '2000ம் ஆண்டு தொடக்கத்தில் எனது நடிப்பில் வெளியான படங்கள் சரியாக ஓடவில்லை. இதன் காரணமாக தனது நண்பர் மூலம் வேலைக்காக கனடா சென்றேன். பின்னர் அங்கேயே இருப்பதற்காக அந்நாட்டு குடியுரிமையை பெற்றேன். ஆனால் வேலைக்கு செல்வதற்கு முன்பாக நான் நடித்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.
இதனால் திரும்பவும் இந்தியாவுக்கே வந்தேன் என்று அக்ஷய் குமார் தெரிவித்தார். இந்திய குடியுரிமை சட்டத்தின்படி 'ஒரு இந்தியக் குடிமகன் தெரிந்தோ அல்லது தன்னிச்சையாகவோ ஒரு வெளிநாட்டு குடியுரிமையை ஏற்றுக்கொண்டால் அவர் குடியுரிமையை இழக்க நேரிடும்' என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடியுரிமை
இந்நிலையில் சுதந்திர தினமான இன்று தான் இந்திய குடியுரிமை பெற்றுவிட்டதாக அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 'இதயமும், குடியுரிமையும் இந்தியன்... இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Dil aur citizenship, dono Hindustani.
— Akshay Kumar (@akshaykumar) August 15, 2023
Happy Independence Day!
Jai Hind! ?? pic.twitter.com/DLH0DtbGxk
முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் வேண்டி அக்ஷய் குமார் விண்ணப்பித்திருந்தார் என்று தகவல் வெளியானது. ஆனால் கொரோனபெருந்தொற்று காரணமாக அதை பெறுவதில் காலதாமதமானது என அவர் அறிவித்திருந்தார்.