கொதித்தெழுந்த அக்ஷரா... பூந்தொட்டியை உடைத்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அக்ஷரா பூந்தொட்டிகளை உடைத்து ருத்தாண்டவம் ஆடியதை பார்த்த சக போட்டியாளர்கள் மிரண்டு போயினர்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக பள்ளிக்கூட டாஸ்க் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் முதல் ஆளாக வார்டன் சிபியிடம் அக்ஷரா ரெட்டி தண்டனை பெற்றார். வகுப்பு நேரத்தில் பாட்டுப்பாடிக் கொண்டிருந்ததால் அவருக்கு 50 தோப்புக்கரணம் போடும் தண்டனை கொடுத்தார் போர்டிங் ஸ்கூல் வார்டன் சிபி. இதனை தொடர்ந்து தமிழ் ஆசிரியரான ராஜுவிடம் அக்ஷராவுக்கு 5 திருக்குறள் கற்றுக்கொடுக்கும்படி சிபி கூற, ராஜு அக்ஷராவுக்கு திருக்குறள் வகுப்பு எடுத்தார். ஆனால் அப்போதே குளிக்கவேண்டும் என்று கூறியப்படி அக்ஷரா வேண்டா வெறுப்பாக கற்றுக்கொண்டார்.
இதனால் ராஜு பின்னர் கற்றுக்கொள்ளலாம் என்று கூறிய பிறகும் கற்றுக்கொள்கிறேன் என கூறி அக்ஷரா கற்றுக்கொண்டார். அப்போது சிபி சாப்பிட்டு வந்து சொல்லாம் என்று கூறி அனுப்பினார். அப்போது ஸ்க்ர்ட்டை ஸ்டீம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு சிபி ஓகே சீக்கிரம் வாங்க டைம் ஆகுது என்றார் .
அதற்கு கடுமையாக கோபப்பட்ட அக்ஷரா, எதுவுமே பண்ண முடியாது. எப்போதும் டாஸ்க்கை மண்டையிலேயே வச்சுட்டு இருக்குறதா என கேட்டு கத்திவிட்டு பாத்ரூம் ஏரியாவுக்கு சென்றார். பின்னர் கையில் இருந்த டிரெஸை தூக்கி எறிந்த போது, அங்கிருந்த பூந்தொட்டியெல்லாம் தட்டிவிட்டு உடைத்தார்.
இதனை தொடர்ந்து அக்ஷராவை சமாதானம் செய்ய சென்ற அபினய் வருண், அண்ணாச்சி என அனைவரிடமும் கத்தி தீர்த்தார். நான் அடிமை இல்லை, நான் என்னவோ இங்கு, அவர்களும் அதுதான். திருக்குறள் எழுத முடியாது என்று சொல்லியும் எழுது எழுது என்று அறிவில்லாமல் செய்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா என்று கேட்டு கத்தினார்.
அப்போது அங்கு வந்த சிபியிடம் என்கிட்ட பேசாதே, உன் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை என படுமோசமாக அக்ஷரா கத்தினார் . இதேபோல் ராஜுவிடமும் கத்திய அவர், ஓவராபண்றீங்க.. உங்களுக்கெல்லாம் அறிவு இல்லையா? இங்க நாய் மாதிரி எல்லாம் இருக்க முடியாது. நான் பிக்பாஸிடம் பேசி கொள்கிறேன் என்று வாய்க்கு வந்தப்படி கத்தி தீர்த்தார். அக்ஷரா கத்தியதை பார்த்த சக போட்டியாளர்கள் மிரண்டு போய்விட்டனர்.