பின்லேடன் இறந்துவிட்டார் , குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார் : பாகிஸ்தான் அமைச்சர் கிண்டல்
பின்லேடன் இறந்துவிட்டார் , குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார் என்று பாகிஸ்தான் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம்
அமெரிக்காவில் உள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது , இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
அதற்கு பதிலடிகொடுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் ஒசாமா பின்லேடனை மறைத்து வைத்தவர்களெல்லாம் காஷ்மீர் பற்றி பேசக்கூடாது என பதில் கூறினார்.
பாம்பு கதை
இதற்கு பதில் கூறிய பிலாவல் பூட்டோ சர்தாரிஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது.
பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்' என்றார்.
இதற்கு நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்னர், 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளிண்டன் “உங்கள் கொல்லைப்புறத்தில் பாம்புகள் (தீவிரவாதிகள்) இருந்தால் அவை உங்கள் அண்டை வீட்டாரை (நாட்டை ) மட்டுமே கடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
இறுதியாக அவை கொல்லைப்புறத்தில் யார் வைத்திருகிரார்களோ அவர்ளையும் கடிக்கும்.’ என ஹிலாரி கிளிண்டன் கூறியதை நினைவு கூறி, பாகிஸ்தான் அமைச்சர் ஹினாவுக்கு பதிலடி கொடுத்தார் மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர்