அமெரிக்க ராணுவத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தமிழ் நடிகை அமெரிக்க ராணுவத்தில் இணைந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் படமாக வெளியான காதம்பரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து நடிப்பு, பாடகி என பல திறமைகளை கொண்டிருந்த அகிலா நாராயணன் ராணுவத்தில் இணைய வேண்டும் என்று விரும்பினார். அமெரிக்க ராணுவத்தில் கடினமான பயிற்சிகளைப் பெற்று பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க பல மாத பயிற்சிகளை பெற்று பட்டம் பெற்ற அகிலா நாராயணன் அமெரிக்க ராணுவத்தில் இணைந்துள்ளார்.
அதாவது ராணுவத்தில் சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணன் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது சேவை மனப்பான்மைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.