என்ஜாய் என்சாமி அகிலா! நடைபயிற்சி, ஸ்விமிங் என லாக்டவுனை சுகமாக அனுபவித்து வரும் கோயில் யானை!
திருவானைக்காவல் கோயில் யானை அகிலா நீச்சல் குளத்தில் குளிப்பதும், கோயில் வளாகத்தில் வாக்கிங் செல்வதும் என லாக்டவுனை சுகமாக அனுபவித்து வருகின்றது.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் நீச்சல் குளம் ஒன்று உள்ளது\
.இந்த நீச்சல் குளத்தில் தினம் தோறும் அந்த கோயில் யானை அகிலா உற்சாக குளியல் போட்டு நடனமாடி வருகிறது.
இதற்கு முன்னதாக யானை அகிலா, கோயில் முன்பு உள்ள தெப்பக்குளத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த ஷவர் தண்ணீர் மூலம் குளித்து வந்தது
தற்போது லாக்டவுன் சமயத்தில் யானை புத்துணர்ச்சியாக இருப்பதால், யானைக்கென தனியாக நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் யானைக்கென தனியாக நடைபயிற்சியுடன் கூடிய தரை தளம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் நீச்சல் குளத்தில் உற்சாக குளியலிட்டு வரும் அகிலா, காலை, மாலை நேரங்களில் கூலாக வாக்கிங் சென்று விளையாடி வருகிறது.