இந்தியா பாகிஸ்தானில் விளையாடுவது பாஜக கையில்தான் உள்ளது - அக்தர்
இந்தியா பாகிஸ்தானில் விளையாடுவது பாஜகதான் முடிவு செய்யும் என அக்தர் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி
2008 முதல் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதை இந்திய கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு தவிர்த்து வருகிறது.
தொடர்ந்து பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்திய அணி தங்கள் நாட்டுக்கு வந்து விளையாட வேண்டும் தொடர்ந்து விருப்பம் தெரிவித்துவரும் பாகிஸ்தான், பாதுகாப்பு விவகாரம் தங்கள் நாட்டு அரசிடம் பேசிவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர்,
அக்தர் நம்பிக்கை
``இந்த விஷயம் உண்மையில் அரசைப் பொறுத்தது. பி.சி.சி.ஐ-க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பா.ஜ.க அரசுதான் இதை முடிவுசெய்வார்கள். திரைக்குப் பின்னால் இதில் பேச்சு இருக்கும். போர்க் காலங்களில் கூட திரைக்குப் பின்னால் பேச்சு நடந்திருக்கிறது.
நாம் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. மேலும், ஐ.சி.சி-க்கான ஸ்பான்சர்ஷிப்பில் 95- லிருந்து 98 சதவிகிதம் இந்தியாவிலிருந்து வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவைப் பாகிஸ்தான் சமாதானப்படுத்தத் தவறினால் இரண்டு விஷயங்கள் நடக்கும்.
ஒன்று, 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்பான்சர்ஷிப் பாகிஸ்தானுக்கு வராமல், ஐ.சி.சி-க்கும், சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் நாட்டுக்கும் செல்லும். இன்னொன்று, இந்திய அணி இங்கு வந்து விளையாடினால் அது நன்றாக இருக்கும். இறுதி நிமிடம் வரை காத்திருங்கள். தற்போதைய நிலவரப்படி, இந்தியா பாகிஸ்தானுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.