அக்தரால் கதறி அழுத மேத்யூ ஹெய்டன் - வெளியான உண்மை தகவல்
பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை டி20 தொடருக்கான பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் வீரர் அக்தர் சில நினைவு சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் விலக அதற்கு பதிலாக தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் ஹெய்டன் தன் பந்து வீச்சில் ஆட முடியாமல் அழுததை நினைவுகூர்ந்துள்ளார்.
2004-05 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடச் சென்ற போது ஹெய்டனை அக்தர் பாடாய்ப்படுத்தினார். இதனால் அந்த தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் இழந்தது.
இதுதொடர்பாக அக்தர் அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு போதும் ஹெய்டனின் உருவத்தை ரசித்ததில்லை, அவர் ஒருநாளும் என் புகழை ரசித்ததில்லை. நான் அவரிடம் ‘உன்னை விட நான் பார்க்க நன்றாக இருக்கிறேன்’ என்று கூறி வெறுப்பேற்றுவேன் என தெரிவித்துள்ளார். அந்தத் தொடரில் அக்தர் ஹெய்டனை வெகுவிரைவில் 3 முறை பெவிலியன் அனுப்பினார். அவரை அழ அடித்தேன், அவரும் அழுதே விட்டார்.
பிறகு இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்காக இருவரும் சந்தித்தோம். நானும் அவரும் விலகியே இருந்தோம், ஏனெனில் கடந்த காலத்தில் நிறைய மோதிக்கொண்டுள்ளோம். ஒரு நாள் என்னுடன் டின்னர் சாப்பிடுமாறு அழைத்தேன். டின்னர் சாப்பிட்டு முடித்து அவரை ட்ராப் செய்யச் சென்றேன்,.
ஆனால் அவர் அறை சாவியை டின்னர் சாப்பிட்ட ஹோட்டலிலேயே விட்டு விட்டார், மீண்டும் இருவரும் போய் சாவியை எடுத்து வந்து மீண்டும் அவரை ட்ராப் செய்தேன். நான் அப்போது அவரிடம் சொன்னேன் இன்னும் கொஞ்சம் பெட்டர் ஆன இடத்தில் நீங்கள் தங்கியிருக்கலாமே என்றேன். நான் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கிறேன் என்றேன்.
அவர் கடுப்பாகி என்ன எழவு பேசுகிறாய் என்றார்.
பின் ஒருநாள் ஹெய்டனிடமிருந்து மெசேஜ் வந்தது. “என் வாழ்நாள் முழுதும் நான் பயந்த ஒரு நபர் மிகவும் நல்ல மனிதர், நான் இழந்த நல்ல மனிதர்” என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டதாக அக்தர் தெரிவித்துள்ளார்.