காலேஜ் கட்டினவரு ஜெயில்ல விவசாயிகளை கொன்றவரு பெயில்ல இதுதான் பாஜக’’ : கொந்தளித்த அகிலேஷ் யாதவ்

akhileshyadav bjpindia azamkhan
By Irumporai Feb 12, 2022 04:07 AM GMT
Report

பல்கலைகழகம் உருவாக்கியவர் சிறையில் உள்ளார்,விவசாயிகளை கொன்றவர் சுதந்திரமாக வலம் வருவதாக அகிலேஷ்யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாடி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது பிரச்சார கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, நமது மாநிலத்தில் இருந்து பாஜ அழிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகளை கொடுத்துள்ளதாக கூறினார்.

மேலும் பாஜக என்ன செய்தாலும் விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என கூறிய அகிலேஷ்யாதவ் அசம் கானின் மகன் அப்துல்லா அசம், பொய் வழக்கில் 2 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் உள்ளார் இவர், ராம்பூரில் பல்கலைக் கழகத்தை கட்டினார்.

பல்கலைக் கழகம் கட்டிய அசம் கான் சிறையில் உள்ளார், விவசாயிகளை காரை ஏற்றி நசுக்கி கொன்ற ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதுதான் காவி கட்சியின் ‘புதிய இந்தியா என அகிலேஷ் யாதவ் கடுமையாக பேசினார்.