எங்க அப்பாவை பற்றி பேசினால் ...உங்க அப்பாவை பற்றி பேசுவேன்.. யோகியை எச்சரித்த அகிலேஷ் யாதவ்

akhileshyadav yogiadiyanath
By Irumporai Aug 09, 2021 12:11 AM GMT
Report

எங்க அப்பாவை பற்றி பேசினால் நான் உங்க அப்பாவை பற்றி பேசுவேன் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை செய்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த சில தினங்களுக்கு, பா.ஜ.க. தலைவர்களை காட்டிலும் நான் பெரிய இந்து என கூறியிருந்தார் . அகிலேஷ்யாதவின் கருத்து குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் செய்தியாளர்கள் கேள்விஎழுப்பினர்.

அதற்கு யோகி ஆதித்யநாத் பதிலளிக்கையில், அகிலேஷ் யாதவ் தந்தை முலாயம் சிங் யாதவ் ஒரு பறவையால் கூட அயோத்தியை நெருங்க முடியாது என்று கூறினார்.

ஆனால் இப்போது அங்கு ராமர் கோயில் கட்டுமானம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு பிரமாண்டமான கோயில் இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

தனது தந்தை முலாயம் சிங் யாதவ் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது அகிலேஷ் யாதவுக்கு கோபத்தை கிளப்பியுள்ளது. இதனையடுத்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது: முதல்வர்யோகி ஆதித்யநாத் வேறு சில மொழி தெரியும். அவர் தேர்தலை வேறு திசைக்கு கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளார்.

அவர் தனது பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். முதல்வர் யோகி ஆதித்யநாத் அஎன் தந்தையை பற்றி ஏதோ கூறினார். அவருடையை தந்தையை பற்றி நானும் ஏதாவது சொல்ல முடியும் என்பதை அவர் மனதில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.