" யார்ரா நீ….?” - ஒரே கேட்சால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரரான ஹூசைன் ஒற்றை கையில் மிரட்டலாக பிடித்த கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 8.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து வீரரான லியன் லிவிங்ஸ்டோன் அடித்த பந்தை, வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் அகெல் ஹூசைன் ஒற்றை கையில் தாவி பிடித்தார். ஹூசைன் பிடித்த இந்த கேட்ச் இங்கிலாந்து அணியின் லிவிங்ஸ்டோனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஹூசைனை ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Puzzle IQ Test: படத்தில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகள்-12 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
