இந்திய அணியை பார்த்தால் பாவமாக இருக்கிறது - முன்னாள் வீரரின் கருத்தால் அதிர்ச்சி
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா அணியின் மிடில் ஆர்டர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது விஷயமாக உள்ளது, குறிப்பாக இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் முன்பு பேட்டிங் செய்தது போல் தற்போது அதிரடியாக பேட்டிங் செய்யவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
என்னதான் சிக்ஸர்கள் அடித்தாலும் அவர் டி20 தொடரில் அவர் விளையாடுவது கொஞ்சம் வருத்தமளிக்கிறது, டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படும் இவர் டி20 தொடரில் அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்று ஆகாஷ் சோப்ரா ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார்..