‘சஞ்சு சாம்சன் இதை தவிர்க்கனும்..கோலிக்கு பெரிய சிக்கலே அந்த பையன் தான்’ - இன்றைய ஆட்டம் குறித்து ஆகாஷ் சோப்ரா டாக்!

Rajasthan Royals Royal Challengers Bangalore IPL 2022
By Swetha Subash May 27, 2022 12:48 PM GMT
Report

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் குவாலிபையர் 2 ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இந்த போட்டியை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அதன்படி சஞ்சு சாம்சன் பற்றி தெரிவிக்கையில்,

“ஹசரங்கா பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து ஆட்டமிழந்து வருகிறார். அதற்கு காரணம் சஞ்சு சாம்சன் தன் மனதில், நீ யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உன் பந்தை நான் அடிப்பேன் என நினைத்துக்கொண்டு விக்கெட்டை இழந்து விடுகிறார்.

‘சஞ்சு சாம்சன் இதை தவிர்க்கனும்..கோலிக்கு பெரிய சிக்கலே அந்த பையன் தான்’ - இன்றைய ஆட்டம் குறித்து ஆகாஷ் சோப்ரா டாக்! | Akash Chopra On Qualifier 2 Rcb Vs Rr Match

அதற்கு பதிலாக ஹசரங்கா ஓவரில் அமைதி காத்து, மற்ற வீரர்களின் பந்துவீச்சில் அடிக்கலாம். சஞ்சு சாம்சன் தனக்குள் போராடி வென்றாலே வெற்றி கிடைக்கும்.” என கூறினார்.

இதனை தொடர்ந்து கிங் விராட் கோலியை பற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா,

“பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கோலி 2 முறை ஆட்டமிழந்திருக்கிறார். பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சை மட்டும் அவர் பத்திரமாக எதிர்கொண்டால் பிறகு அவர் ரன் அடிக்கலாம். சாஹலும் விராட் கோலிக்கு சிக்கலை உண்டாக்கலாம்.

‘சஞ்சு சாம்சன் இதை தவிர்க்கனும்..கோலிக்கு பெரிய சிக்கலே அந்த பையன் தான்’ - இன்றைய ஆட்டம் குறித்து ஆகாஷ் சோப்ரா டாக்! | Akash Chopra On Qualifier 2 Rcb Vs Rr Match

ஏனெனில் இருவரும் ஒரே அணியில் இருந்ததால், ஒருவரை ஒருவர் அதிகமாக போட்டியில் எதிர்கொண்டது இல்லை. இதனால் அவர்களுக்குள் நடக்கும் பந்தயத்தையும் பார்க்க வேண்டும்.” என தெரிவித்தார்.

பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டுபிளஸியை குறித்து பேசுகையில்,

“ அவருக்கு எப்போதுமே இடது கை வேகப்பந்துவீச்சாளரால் சிக்கல் உள்ளது. கடந்த போட்டியில் கூட மோஷின் கான் பந்துவீச்சில் தான் டுபிளஸி டக் அவுட் ஆனார்.

‘சஞ்சு சாம்சன் இதை தவிர்க்கனும்..கோலிக்கு பெரிய சிக்கலே அந்த பையன் தான்’ - இன்றைய ஆட்டம் குறித்து ஆகாஷ் சோப்ரா டாக்! | Akash Chopra On Qualifier 2 Rcb Vs Rr Match

இதே போன்று மார்கோ யான்சனும் டுபிளஸிக்கு தலை வலியை தந்துளளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பவுல்ட், டுபிளஸிஸ்க்கு சிம்ம சொப்பனமாக இருக்க வாய்ப்புள்ளது.” என கருத்து தெரிவித்தார்.

இறுதியாக ஜாஸ்பட்லர் குறித்து தெரிவிக்கையில்,

“ அவரை பொறுத்தவரை, அவர் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ரன் குவிக்க வேண்டுமே தவிர ஆங்கர் ரோல் செய்ய கூடாது. இதே போன்று மேக்ஸ்வெல், சாஹல் பந்துவீச்சை அதிரடியாக ஆடி ரன் குவிக்க முய்றசி செய்வார்.

ஆனால் அது சில சமயம் வெற்றியை தந்தாலும், சில சமயம் ஆபத்தில் கூட முடியலாம்” என ஆகாஷ் சோப்ரா இன்றைய போட்டியில் மோதவுள்ள வீரர்களை குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.