தோனி கிட்ட இதை இனிமேல் எதிர்பார்க்காதீங்க - கடுப்பில் முன்னாள் வீரர் சொன்ன தகவல்
சென்னை அணி கேப்டன் தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சென்னை அணியின் இந்த தோல்விக்கு அணியின் ஆமை வேக ஆட்டமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கேப்டன் தோனி 27 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.இந்தநிலையில், தோனி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, இனி தோனியிடம் அவரது பழைய ஆட்டத்தை எதிர்பார்க்க கூடாது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2011, 2015 அல்லது 2017 ஆம் ஆண்டுகளில் விளையாடியது போது தோனி இப்பொழுதும் விளையாட வேண்டும் என எதிர்பார்ப்பதே தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.