“கோலி ராஜ்ஜியம் இல்லா அரசனை போல..ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இவர் வந்தா தான் சரியாக இருக்கும்” - கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக யார் இருந்தால் அணி பலம் வாய்ந்ததாக இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும்
கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பத்து அணிகளை கொண்டு 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வெகுவாக எழுந்துள்ளது.
இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகிற பிப்ரவரி 12, 13-ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது,
இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் உட்பட உலகெங்கும் இருக்கும் வீரர்களும் தங்களது பெயர்களை ஏலத்திற்காக பதிவிட்டிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்கள் பட்டியல் மற்றும் தனது அணியை வழி நடத்தக்கூடிய கேப்டன் குறித்தும் தெரிவித்துவிட்டனர்.
ஆனால் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி யாரை கேப்டனாக்கும் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.
இதன் காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக யார் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்தான தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் குறித்து பேசியிருக்கிறார்.
அதில், “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி,மேக்ஸ்வெல் மற்றும் சிராஜ் போன்ற வீரர்களை தக்க வைத்துள்ளது. விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்க மாட்டேன் என்று முடிவெடுத்து விட்டார்.
இதனால் இதில் மீதமுள்ள இரண்டு விரர்களில் யாரை கேப்டனாக்குவார்கள் என்ற கேள்வி எழுநதுள்ளது. மேக்ஸ்வெல்லை கேப்டனாக்களாம் என்று சிலர் நினைக்கின்றர்.
ஆனால் கேப்டன் பதவிக்கு மேக்ஸ்வெல் சரிபட்டு வரமாட்டார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டன் ஆக்கலாமா என்று பெங்களூரு அணி யோசித்து வருகிறது.
ஆனால் என்னை பொறுத்த வரையில் ஜேசன் ஹோல்டர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக இருப்பார். ஜேசன் ஹோல்டருக்கு அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.
பெங்களூர் அணி யாரை வேண்டுமானாலும் கேப்டனாக்கலாம், ஆனால் விராட் கோலிக்கு முடிவெடுக்கும் உரிமை இப்பொழுதும் உள்ளது. கிட்டத்தட்ட விராட் கோலி ராஜ்ஜியம் இல்லாத அரசனை போன்றவர்” என்று அவர் பேசியிருக்கிறார்.