நடிகை அகான்ஷா மோகன் தற்கொலை - ரூமில் போலீசார் கையில் சிக்கிய கடிதம் - வெளியான தகவல்
நடிகை அகான்ஷா மோகன் தற்கொலை சம்பவம் தொடர்பாக அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது.
நடிகை அகான்ஷா மோகன்
மும்பையில் உள்ள லோகண்ட் வாலா பகுதியில் வசித்து வந்தவர் நடிகை அகான்ஷா மோகன். இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். மாடலிங் துறையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மாடல் அழகியாக வலம் வந்தார். இதனையடுத்து, இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து, ‘சியா’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்தார். பின்னர், தமிழில் ‘9 திருடர்கள்’ என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில், மும்பையின் உள்ள வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 2 நாட்களுக்கு நடிகை அகான்ஷா மோகன் முன்பு தங்கினார். 2 நாட்களாக அவர் தங்கியிருந்த அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர், மாற்று சாவியை பயன்படுத்தி ரூமை திறந்து பார்த்தனர். அப்போது, நடிகை அகான்ஷா மோகன் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் கையில் சிக்கிய கடிதம்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அகான்ஷா மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த அறை முழுவதும் சோதனை செய்தனர். அப்போது, நடிகை இறக்கும் முன் எழுதிய தற்கொலை கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அந்தக் கடிதத்தில், ‘என்னை மன்னித்துவிடுங்கள். நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி தேவை. எனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை. யாரையும் தொல்லை செய்யாதீங்க’ என உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.