வெளியானது நடிகர் அஜித் குமாரின் ‘AK62’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்

kollywood ajithkumar vigneshshivan AK62 lycaproductions movieupdate
By Swetha Subash Mar 18, 2022 02:13 PM GMT
Report

நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான அப்டேட்டை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில் AK62 குறித்த அறிவிப்பு தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

அதன்படி நடிகர் அஜித் குமார் அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார். படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.

மேலும், படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கவுள்ளார் என லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AK62 படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்கும் எனவும் படத்தில் இணையவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.   

இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.