கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..!

Ajith Kumar Vignesh Shivan
By Nandhini 1 மாதம் முன்
Report

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

துணிவு

சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையையும் படைத்துள்ளது.

விக்கியை கழட்டிவிட்ட அஜித்

கடந்த சில நாட்களாக அஜித்தின் AK62 படத்தைப் பற்றிய சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. துணிவு படத்திற்கு பிறகு, நடிகர் அஜித் அடுத்து விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருந்த நிலையில், திடீரென AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்காமல் போனதாக சொல்லப்படுகிறது

. AK62 படத்தை விஷ்ணு வர்தன் அல்லது மகிழ் திருமேனி போன்ற இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், AK62 படத்தின் OTT உரிமையை NETFLIX நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

ak-62-ajithkumar-vignesh-shivan

கவர் பிக்சரை மாற்றிய விக்கி

ஏ.கே. 62 பட வாய்ப்பு கிடைத்ததும் டுவிட்டரில் அஜித் குமாரின் புகைப்படத்தை கவர் பிக்சராக வைத்தார் விக்னேஷ் சிவன்.

இதனையடுத்து, ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்று பேச்சு எழுந்ததையடுத்து தற்போது கவர் பிக்சரை அவர் மாற்றியுள்ளார். அஜித் புகைப்படத்தை நீக்கிவிட்டு ஊக்கமளிக்கும் வாசகத்தை வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். நெவர் கிவ் அப் என்கிற வாசகத்தை வைத்துள்ளார்.

தற்போது இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், அஜித் கைவிட்டாலும் அவர் சொன்னதை விக்னேஷ் சிவன் மறக்கவில்லை. அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பு நிச்சயம் உங்களை தேடி வரும். அதுவரை நம்பிக்கையை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

ak-62-ajithkumar-vignesh-shivan

ak-62-ajithkumar-vignesh-shivan

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.