ஏகே 62: அஜித்துடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய் : குஷியில் ரசிகர்கள்

Ajith Kumar Aishwarya Rai
By Irumporai Jan 16, 2023 11:58 AM GMT
Report

அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ஏகே62

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்  தொடங்கப்படும் நிலையில், ஏகே 62 குறித்த அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஏகே 62 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஏகே 62: அஜித்துடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய் : குஷியில் ரசிகர்கள் | Ak 62 Aishwarya Rai

மீண்டும் அஜித் ஐஸ்வர்யா ராய்

இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஒன்றாக நடித்தனர்

தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் குஷியினை உண்டாக்கியுள்ளது