அஜித் குமார் உயிரிழப்பு - பிரேத பரிசோதனை முடிவு என்ன சொல்கிறது?
அஜித் குமார் உயிரிழப்பு விவகாரத்தில் 5 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஜித் குமார் உயிரிழப்பு
சிவகங்கை, மடப்புரம் கோவிலில் சாமி கும்பிட வந்த நிக்கிதா என்பவரின் சிவப்பு கலர் காரை பார்க் பண்ணுவதாகச் சொல்லி சாவியை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் வாங்கியுள்ளார்.
அந்தக் காரில் இருந்த 5 பவுன் நகை மற்றும் பணம் 2,500யை அவர் எடுத்துவிட்டதாகப் புகார் வர, அந்த நபரை விசாரிக்குமாறு மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அஜித் குமாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும்,
விசாரணையில் காரை யார் பார்க்கிங் செய்தனர் என கேட்டபோது, அவர் மாறி மாறி மூன்று நபர்களின் பெயர்களை கூறினார் எனவும் எஃப் ஐ ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஜித் குமாரின் தம்பி நவீனை விசாரிக்கக் கொண்டு செல்லப்பட்டபோது,
பிரேத பரிசோதனை முடிவு
அஜித்தான் நகையை எடுத்ததாக ஒப்புக்கொண்டதாகவும் மேலும், திருடிய நகைகளை கோவிலுக்குப் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அங்கு சென்று போலீசார் தேடியபோதும் நகை கிடைக்கவில்லை என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விசாரணையின் போது, அஜித் தப்பிப் போவதற்காக ஓடியதில் தவறி விழுந்ததால், அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்றபோது, வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில், வலது கை மூட்டுக்கு மேலேயும், வலது கை மணிக்கட்டுக்கு கீழேயும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. இடதுபக்க காதில் ரத்தம் வடிந்த நிலையிலும்,
வலது பக்க காதில் உள்பக்கம் ரத்தம் உறைந்த நிலையிலும் இருந்தது. இடதுபக்க தோள்பட்டை முதல் முழங்கை மூட்டு வரை கன்றிய காயங்கள் இருந்தன. இடதுபக்க இடுப்பு, வலதுபக்க பின் முதுகில் சிராய்ப்புகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.