ஓடும் ஆற்றில் அசால்டாக பைக்கில் சென்ற அஜித் - வைரலாகும் மாஸ் வீடியோ

Ajith Kumar Viral Video
By Nandhini Sep 06, 2022 09:42 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை அன்போடு அவரது ரசிகர்கள் ‘தல’ என்று அழைக்கின்றனர்.

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் வெளியானது. இதனையடுத்து, தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

வைரலான அஜித் பைக் பயணம்

முன்னதாக ‘வலிமை’ படப்பிடிப்பு நடைபெற்ற போது, இடையே கிடைத்த விடுமுறை நாட்களில் நடிகர் அஜித்குமார் உலகை சுற்றிப் பார்க்கச் சென்றார்.

அதன்படி ஐரோப்பிய நாடுகளை தனது பைக் பயணத்தின் மூலம் சுற்றிப் பார்த்த அஜித்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதளத்தில் டிரெண்டாகி வந்தது. இதனையடுத்து, லண்டனுக்கு சென்ற அஜித்தின் ரசிகர் சந்திப்பும் இணையதளத்தில் பரவியது.

தற்போது நடிகர் அஜித்துடன் மஞ்சுவாரியரும் இணைந்து பைக் ரைடிங் செய்த புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்த நிலையில், அவர் சென்ற பைக்கிற்கு இன்சூரன்ஸ் கிடையாது என்ற தகவல் பரவியது.

வாட்டர் கிராசிங் செய்த அஜித்

இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் அசால்ட்டாக, ஓடும் ஆற்றில் கிராசிங் செய்து மாஸ் காட்டியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களை அவரது ரசிகர் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.   

ajith