கார்கில் போர் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய நடிகர் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்
கார்கில் போர் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை அன்போடு அவரது ரசிகர்கள் ‘தல’ என்று அழைக்கின்றனர். சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் வெளியானது. இதனையடுத்து, தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
அஜித் பைக் பயணம்
நடிகர் அஜித், ஐரோப்பிய நாடுகளை தனது பைக் பயணத்தின் மூலம் சுற்றிப் பார்த்தார். இதனையடுத்து, லண்டனுக்கு சென்றார் நடிகர் அஜித். அப்போது, ரசிகர் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் இணையதளத்தில் பரவியது. தற்போது நடிகர் அஜித்துடன் மஞ்சுவாரியரும் இணைந்து பைக் ரைடிங் செய்த புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்த நிலையில், அவர் சென்ற பைக்கிற்கு இன்சூரன்ஸ் கிடையாது என்ற தகவல் பரவியது.
வாட்டர் கிராசிங் செய்த அஜித்
தற்போது இமயமலை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு, பைக் ரேஸ் சென்றுள்ளார் நடிகர் அஜித். இதனையடுத்து, நடிகர் அஜித் அசால்ட்டாக, ஓடும் ஆற்றில் கிராசிங் செய்து மாஸ் காட்டினார்.
வீரர்களுக்கு சல்யூட் அடித்த நடிகர் அஜித்
இந்நிலையில் நடிகர் அஜித், கார்கில் போர் வீரர்கள் நினைவகத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியிருக்கிறார்.
[]
மேலும், சில ராணுவ வீரர்களுடனும் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Y these.. cheap Publicity Ajith ? ? pic.twitter.com/5XkZDuhvFK
— × റോബിൻ ⱼD × ? (@PeaceBrwVJ) September 7, 2022
#AjithKumar ll #AK61 ll
— Churchill Rajasekar (@rajasekar95) September 7, 2022
Thala ? Recent pic salute ? pic.twitter.com/SVHScSLCoE
Ajith Sir Today's Clicks ???#AK #AjithKumar #AK61 pic.twitter.com/u2yhWOr9U9
— AK FANS COMMUNITY™ (@TFC_mass) September 7, 2022