கம்பியைப் பிடித்து பஸ்ஸில் நின்றுக்கொண்டு பயணம் செய்த நடிகர் அஜித்...! - வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை அன்போடு அவரது ரசிகர்கள் ‘தல’ என்று அழைக்கின்றனர்.
ஏ.கே.61 படம்
சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் வெளியானது. இதனையடுத்து, தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
மக்களோடு மக்களாய் பயணம் செய்த அஜித்
இந்நிலையில், படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டிணம் செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார் நடிகர் அஜித். விமான நிலையத்திலிருந்து விமானம் இருக்கும் இடத்திற்கு செல்ல பயணிகள் அனைவரையும் பஸ் ஒன்றில் அழைத்து செல்வர்.
அப்போது, இன்று காலை அஜித் சென்னை விமான நிலையத்தில் ஒரு பேருந்தில் மக்களோடு மக்களாக பயணம் செய்தார். அந்த பேருந்தில் கூட்டமாக இருந்தபோதிலும் அவர் மிக எளிமையாக நின்றபடியே பயணம் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வைரலாகும் வீடியோ
அஜித் நின்றபடி பயணம் செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், மக்கள் கூட்டத்தை பார்த்தாலே பயந்து ஓடும் பிரபலங்களுக்கு மத்தியில் மக்களோடு மக்களாக மிகவும் எளிமையான மனிதராக அஜித் நின்றுக்கொண்டு பயணம் செய்திருப்பதை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
THALA AJITH Recent Video ??#AK61 •• #AjithKumar pic.twitter.com/kKL2L7vTnu
— KUMAR ⚔️ (@KumarOff) August 16, 2022