கொரோனாவை விரட்டும் வலிமை கிருமிநாசினி : வித்தியாசமான முறையில் அன்பை வெளிப்படுத்திய அஜித் ரசிகர்கள்
மலேசியாவைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் வலிமை என்ற பெயரில் கிருமிநாசினியை அறிமுகம் செய்துள்ளனர். நடிகர் அஜித் குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வேற மாரி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில் மலேசிய அஜித் ரசிகர்கள் சார்பில் வலிமை என்ற பெயரில் கிருமிநாசினி ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
பொதுவாக (தல) அஜித் ரசிகர்கள் அவர் மீது காட்டும் அன்புக்கு அளவே கிடையாது இந்த நிலையில் தற்போது கொரோனா அதிகம் உள்ள நிலையில் அஜித ரசிகர்கள் கிருமிநாசினி கொடுத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது,மேலும் அஜித் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பையும் காட்டுகிறது.