திமுக-வில் இணைந்தார் அஜிதா ஆக்னல்

Smt M. K. Kanimozhi
By Fathima Apr 13, 2026 09:27 AM GMT
Report

தவெக உறுப்பினரான அஜிதா ஆக்னல் திமுக-வில் இணைந்து கொண்டார்.

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்துக்காக தீவிரமாக பணியாற்றி வந்தார் அஜிதா ஆக்னல்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் தவெக மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற்ற போது, தனக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என நினைத்திருந்தார்.

திமுக-வில் இணைந்தார் அஜிதா ஆக்னல் | Ajitha Joined In Dmk

அது நடக்காமல் போகவே, விஜய்யை சந்தித்து பிரச்சனையை எடுத்துக்கூற முயன்றார், அதற்கான அனுமதி மறுக்கப்பட்ட போது, சில நாட்கள் கழித்து விபரீதமாக முடிவெடுத்தார், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து தவெக நிர்வாகிகள் உட்பட யாரும் அஜிதா ஆக்னலை சந்திக்கவில்லை, வேட்பாளர் பட்டியலிலும் அவர் பெயர் இல்லாததால் விரக்தியடைந்தவர் தற்போது திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இன்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழியை நேரில் சந்தித்து இணைந்து கொண்டார்.

இவரது சகோதரர் பில்லா ஜெகன் திமுகவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திமுக-வில் இணைந்தார் அஜிதா ஆக்னல் | Ajitha Joined In Dmk