‘ரவி’ந்தர் இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத’ஆளுநரை எச்சரிக்கும் அஜித் - வைரலாகும் துணிவு பட காட்சி
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கமான மோதல் போக்கு என்பது இருந்து வரும் நிலையில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆளுநருடன் தமிழக அரசு மோதல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஏற்கனவே கண் கொத்தி பாம்பாக காத்திருந்த தமிழக எதிர்க்கட்சிகள் ஆளுநரை பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் ஆளுநர் ரவி தனது உரையை நிறுத்தாமல் வாசித்தார்.
இதற்கிடையில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதியை மட்டும் குறிப்பாக பெரியார், தமிழ்நாடு அரசு, திராவிட மாடல், அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்து விட்டார்.
இதனால் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசித்துக் கொண்டு இருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி கோபத்தில் சட்டப்பேரவையை விட்டு ஆவேசமாக வெளியேறினார்.
இந்த விவகாரம் அரசியலிலும், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அஜித் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் துணிவு படத்தில், ஆளுநரை மறைமுகமாக எச்சரித்துள்ளது போல வசனம் அமைக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி உள்ள தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநரை விமர்சித்த துணிவு திரைப்படம்
நடிகர் அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள புதிய திரைப்படம் துணிவு. படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்.
அதில் ‘ரவி’ந்தர் இது தமிழ்நாடு.. இங்க உன் வேலைய காட்டாத’ என, அஜித்குமாரின் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அரசு - ஆளுநர் ரவி இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் அஜித்தின் துணிவு இடம் பெற்றுள்ள ‘ரவி’ந்தர் இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத’ என்ற வசனம் வைரலாகி வருகிறது.