தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026: முதல் வாக்கை செலுத்திய அஜித்

Ajith Kumar Election
By Fathima Apr 24, 2026 04:42 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026ல் முதல் வாக்காக பதிவாகியிருக்கிறது நடிகர் அஜித்குமாரின் வாக்கு.

உலகில் எங்கு இருந்தாலும் தேர்தல் நாளன்று தனது ஜனநாயக கடமையை ஆற்ற அஜித் தவறியதில்லை, நேற்றைய தினமும் பெல்ஜியத்தில் இருந்து வாக்களிப்பதற்காக சென்னை வந்திருந்தார்.

அஜித் வாக்களிக்கும் திருவான்மியூர் வாக்குசாவடியில் அவரது ரசிகர்கள் காலை 6.45 மணிக்கே கூடினர், வெள்ளை நிற கோட் சூட்டில் வந்த அஜித், காலை 6.45 மணிக்கே வாக்களித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026: முதல் வாக்கை செலுத்திய அஜித் | Ajith Vote First In Tn Election 2026

காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கும் நிலையில், அஜித் 6.45 மணிக்கே வாக்கு செலுத்திவிட்டார், முதல் வாக்காக அவரது வாக்கு பதிவானது.

வாக்களிக்கும் முன்பாக கூடியிருக்கும் ரசிகர்களை தனது போனில் வீடியோவாக பதிவு செய்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.