விஜய் பாடலில் இடம் பெற்ற நடிகர் அஜித் புகைப்படம் - இணையத்தில் வைரல்
பீஸ்ட் படத்தின் ப்ரோமோ வீடியோவில் நடிகர் அஜித்தின் போட்டோ இடம் பெற்றுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்தாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே படத்தின் முதல் சிங்கிள் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீசாகும் என்றும், நேற்று வெளியான ப்ரோமோ வீடியோ மூலம் அறிவித்தனர். நெல்சன் திலீப் குமார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடலாசிரியர் - நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இந்த பாட்டு உருவான விதத்தை காமெடி கலந்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ப்ரோமோ வீடியோவில் விவேகம் மிகப் பெரிய அளவில் வைரலாகியிருந்த 'Surviva' என்ற பாடல் இடம் பெற்றது. அந்த வகையில் விவேகம் படத்திற்காக அனிருத் வாங்கிய விருதில் அஜித் புகைப்படம் இருப்பதை ரசிகர்கள் கண்டு கொண்டனர்.