நயன்தாரா-விக்கி திருமணத்தில் இணையும் அஜித் - விஜய் : கசிந்த சுவாரஸ்ய தகவல்.. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Ajith Kumar Vijay Nayanthara
By Swetha Subash Jun 03, 2022 07:07 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகிறது.

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வரும் நிலையில் இந்த ஜோடியின் திருமணத்தை தான் சினிமா வட்டாரமும் சரி இவர்களது ரசிகர்களும் சரி எதிர்நோக்கி காத்திருகின்றனர்.

நயன்தாரா-விக்கி திருமணத்தில் இணையும் அஜித் - விஜய் : கசிந்த சுவாரஸ்ய தகவல்.. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Ajith Vijay To Meet At Nayanthara Wikki Wedding

அந்த வகையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் வருகிற 9-ம் தேதி மகாபலிப்புரத்தில் உள்ள பிரபல ரெசார்ட்டில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் திருமணத்தில் நெருங்க்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள உள்ள நிலையில், சினிமா பிரபலங்களிலும் ஒரு சிலருக்கே அழைப்பு சென்றுள்ளது.

நயன்தாரா-விக்கி திருமணத்தில் இணையும் அஜித் - விஜய் : கசிந்த சுவாரஸ்ய தகவல்.. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Ajith Vijay To Meet At Nayanthara Wikki Wedding

அந்த வகையில் தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த திருமணத்தில் நடிகர் அஜித்தும் விஜய்யும் சந்தித்துக்கொள்ள இருக்கிறார்கள்.

தற்போது இந்த சந்திப்பை எதிர்நோக்கி தான் இந்த இரு நட்சத்திரத்தின் ரசிகர்களும் காத்துக்கிடக்கின்றனர்.