இங்கேயும் வலிமை அப்டேட்டா? அப்பா முடியலடா! WTC பைனல்ஸில் அஸ்வினிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
சவுத்தாம்ப்டனில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஒரேயொரு பைக் ஸ்டண்ட் காட்சியை மட்டும் படமாக்க வேண்டியிருக்கிறது. அந்த காட்சியை ஸ்பெயினில் படமாக்க காத்திருக்கிறார்கள்.
கொரோனா காரணமாக படக்குழுவால் ஸ்பெயினுக்கு செல்ல முடியவில்லை. இதற்கிடையே சவுத்தாம்ப்டனில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர் ஒருவர் பதாகை ஏந்தியது வைரலாகியிருக்கிறது.
மேலும் அஸ்வினிடம் வலிமை அப்டேட் கேட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டத்தில் இருந்து வலிமை படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லை. அஜித்தின் பிறந்தநாளுக்கு கூட அப்டேட் வராததால் ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று யார், யாரிடமோ வலிமை அப்டேட் கேட்டார்கள்.
இதை பார்த்த அஜித் கோபம் அடைந்து, அப்டேட் வர வேண்டிய நேரத்தில் வரும் என்று அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் இங்கிலாந்து போட்டியில் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டிருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#ValimaiUpdate ?#ThalaAjith #Valimai #Ajithkumar #WTCFinal21 #INDvsNZ #Thala pic.twitter.com/vM53SwONOT
— TRENDS AJITH | ᴡᴇᴀʀ ᴍᴀꜱᴋ - ꜱᴛᴀʏ ꜱᴀꜰᴇ (@TrendsAjith) June 20, 2021