மீண்டும் தள்ளிப்போகும் தல படத்தின் அப்டேட்

change update ajith thala
By Praveen Apr 23, 2021 03:10 PM GMT
Report

தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட் மீண்டும் தள்ளிபோகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தல அஜித் அவர்கள் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பூஜை போட்ட அப்டேட் மட்டும் தான் இதுவரையில் வெளியாகியுள்ளன. ரசிகர்களும் தங்கள் தல படத்தின் அப்டேட் வராத என்று ஏங்கி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் அப்டேட் தல அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் அதுவும் தள்ளி போகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், " எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித்குமார் அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

அந்த அறிவிப்பு வெளிவரும்போது கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து உற்றார் உறவினர் உயிர் இழந்து நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

இத்தகைய அதாசாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ் பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின் படி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும், பாதுகாப்பாகவும் பிராத்திப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.