அடுத்த வாரம் வெளியாகிறது வலிமை டீசர் - ரசிகர்கள் உற்சாகம்
வலிமை படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அஜித்தின் அட்டகாசமான நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வலிமை'. அஜித் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார்.
பைக் ரேஸிங் குற்றங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயாவும், கதாநாயகியாக ஹுமா குரேஷியும் நடித்துள்ளனர்.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அதேபோன்று யுவனின் இசையில் வெளியான முதல் பாடலும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ‘அண்ணாத்த’ படத்தின் ரீலீசால் டிசம்பர் மாதம் தான் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ தயாராகிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை அடுத்த வாரம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.