‘துணிவு’ படத்தால் நான் ஏமாந்துவிட்டேன்...! புலம்பிய ஸ்டண்ட் இயக்குனர்...! தீயாய் பரவும் தகவல்...!
‘துணிவு’ படத்தால் நான் ஏமாந்துவிட்டேன் என்று ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் குறித்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் அஜீத்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.
துணிவு
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜீத் நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்ப்பதற்கு அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் நடிகர் அஜீத்தின் ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ வெளியானது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
துபாயில் துணிவு புரொமோஷன்
சமீபத்தில் துபாயில் வானில் பறந்தபடி துணிவுக்கு புரமோஷன் செய்யப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அஜீத் ரசிகர்கள் துள்ளி குதித்து லைக்குகளை அள்ளி தெறிக்க விட்டு வருகின்றனர்.
புலம்பிய ஸ்டண்ட் இயக்குநர்
இந்நிலையில், துணிவு படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குநர் குறித்து ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அஜீத் என்றாலெ ரேஸுக்கு பஞ்சமிருக்காது என்று ரசிகர்கள் நினைப்பார்கள். அந்த நினைப்போடுதான் இப்படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனரான சுப்ரீம் சுந்தரும் வந்துள்ளார். அஜீத்திற்கு ஏற்றாற் போல் மாஸாக ஒரு ஃபைட் வைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார் சுந்தர். ஆனால் இயக்குனர் வினோத், சுந்தரிடம் இப்படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், அஜீத்தும், சுந்தரிடம் இப்படத்தில் ரியாலிட்டி இருக்க வேண்டும். எனக்காக ஃபேண்டஸி வைக்கவேண்டும் என்று எதுவும் பண்ண வேண்டாம். கீழே விழுவதிலிருந்து அடிவாங்குவதில் இருந்து எல்லாமே ரியாலிட்டியாக காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதை கேட்டதும் சுப்ரீம் சுந்தர் ஏமாற்றமடைந்தாராம். இது குறித்து ஸ்டண்ட் இயக்குநர் சுப்ரீம் சுந்தர் சிலரிடம் புலம்பிய தகவல் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.