துபாயில் நடுவானில் பறந்தபடி அஜீத்தின் ‘துணிவு’ படத்திற்கு புரமோஷன் - வைரலாகும் மாஸ் வீடியோ...!
துபாயில் நடுவானில் பறந்தபடி அஜீத்தின் ‘துணிவு’ படத்திற்கு புரமோஷன் செய்யப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜீத்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.
துணிவு
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜீத் நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் அஜீத்தின் ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ வெளியானது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
துபாயில் துணிவு புரொமோஷன்
இந்நிலையில், துபாயில் வானில் பறந்தபடி துணிவுக்கு புரமோஷன் செய்யப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அஜீத் ரசிகர்கள் துள்ளி குதித்து லைக்குகளை அள்ளி தெறிக்க விட்டு வருகின்றனர்.
#Thunivu Promotions in full swing in Sky Dubai ?#ThunivuPongal2023 #Thunivu #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth @LycaProductions @boneykapoor @ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @kalaignartv_off @NetflixIndia @mynameisraahul pic.twitter.com/7CB6VJoas2
— Neelan Media (@NeelanMedia) December 26, 2022