Wow... கெத்தா... ஸ்டைலா... அஜீத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் வெளியானது...! தெறிக்க விடும் ரசிகர்கள்...!

Ajith Kumar Thunivu
By Nandhini Dec 09, 2022 01:20 PM GMT
Report

தற்போது நடிகர் அஜீத்தின் ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜீத்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

வலிமை

சமீபத்தில் நடிகர் அஜீத்தின் 60-வது படமாக உருவான‘வலிமை’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கினார்.

இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்தார். இப்படம் ‘பாக்ஸ் ஆபிஸி’ல் வசூலை வாரி குவித்தது.

ajith-thunivu-chilla-chilla-song

சில்லா, சில்லா பாடல் வெளியீடு

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜீத் நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அஜீத்தின் ரசிகர்கள் லைக்குகளை அள்ளிப்போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.