பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலஅஜித் : ஓபிஎஸ் வாழ்த்து

Ajith Kumar
By Irumporai May 01, 2022 03:38 AM GMT
Report

உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம், தமிழகத்தின் முன்னணி நடிகராக தடம் பதித்துள்ள  நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளும் இன்றைய தினத்திலேயே வருகிறது.

இந்நிலையில்,அரசியல் பிரமுகர்கள்,சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள் உட்பட பலரும் நடிகர் அஜித் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்:

உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து,உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்”,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,”தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்த உயர் தினமாகவும் திகழும் மே தினத்தில் உலககெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.