படம் துவங்கும் முன் வந்த சிக்கல் - விஜய் மகனுக்கு உதவ முன்வந்த அஜித்
விஜய் மகன் சஞ்சய்யிடம் நடிகர் அஜித்குமார் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இயக்குநர் சஞ்சய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது நடித்து வரும் தளபதி69 படப்பிடிப்பு முடிந்த உடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவிற்குள் கால் பதித்துள்ளார். இவரது முதல் படத்தை லைகா தயாரிக்கிறது. இந்த படத்தின் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார்.
அஜித்
சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்க காலமான நிலையில், மனமுடைந்த சஞ்சய் வேறு தயாரிப்பு நிறுவனத்தை அனுகலாமா என தனது நலம் விரும்பியான சுரேஷ் சந்திராவை செல்போனில் அழைத்து பேசியுள்ளார். அஜித் சுரேஷ் சந்திரா அஜித்தின் மேனேஜர் ஆவார்.
அப்போது அருகில் இருந்த அஜித் யாருடன் பேசுகிறீர்கள் என கேட்க, 'விஜய் மகனுடன்' என சுரேஷ் சந்திரா கூறவும் போனை வாங்கி அஜித் பேசியுள்ளார். போனில் பேசிய அஜித், சஞ்சய்யிடம் நலம் விசாரித்து முதல் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், படம் தொடர்பாக என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் சொல். தேவைப்பட்டால் வேறு தயாரிப்பு நிறுவனங்களை கூட பரிந்துரைக்கிறேன் என கூறியுள்ளார். பிரபல பத்திரிகையாளரான அந்தணன் கூறிய இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.