விஜய்க்கு நல்லது மட்டுமே நினைத்து இருக்கிறேன்; அமைதியா இருங்க - அஜித்குமார்
விஜய்க்கு நல்லது மட்டுமே நினைத்து இருக்கிறேன், வாழ்த்தியிருக்கிறேன் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
அமைதியா இருங்க
நடிகர் அஜித்குமார் தனியார் யூடியூப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கரூர் சம்பவத்தில் தான் தெரிவித்த கருத்து விஜய்க்கு எதிரானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆங்கில ஊடகத்திற்கு நான் கொடுத்த பேட்டியை இளைஞர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு சேர்ப்பதை விட அவரவர் சுயநலத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சினிமா பத்திரிகையாளர்கள், அரசியல் பத்திரிக்கையாளர்கள் என்று இருந்தனர்.
ஆனால் இப்பொழுது சினிமா பத்திரிக்கையாளர்கள் அரசியல் மயமாகி உள்ளனர். ஒரு சில ஊடகங்களால் அந்தப் பேட்டி அஜித்துக்கும் விஜய்க்கும் நடக்கக்கூடிய மோதல், விஜய் அஜித் ரசிகர்களுக்கான போர் என்று சித்தரித்துள்ளனர்.
முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள், பார்ப்பதற்கு தகுதியான படமாக இருந்தால் மட்டும் என்னுடைய திரைப்படங்களை பாருங்கள் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். படத்தை பாருங்கள் என்று மக்களை இன்ஃப்ளூயன்ஸ் செய்ய மாட்டேன், ஓட்டு கேட்டும் வரமாட்டேன்.
அஜித் காட்டம்
ரேசிங்கை பொறுத்தவரை அரசிடம் இருந்து funding எதிர்பார்ப்பது தவறு. ஏனென்றால் மாநிலத்தில் நிறைய பிரச்சனைகள் தீர்த்து வைப்பதற்கு உள்ளது. ரேஸ் காரில் உட்காரும்போது இறப்பதற்கு ஒரு நொடி போதும் என்று எனக்கு தெரியும்.

அதனால் எனக்கு எந்த ஒரு திட்டமும் உள்நோக்கமும் கிடையாது என்பது புரிந்து கொள்ளுங்கள். எப்போதும் என்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து வாழ வேண்டும் என்று மட்டுமே நான் நினைப்பேன். கரூரில் நடந்தது மிகவும் துரதிஷ்டமான ஒரு சம்பவம். அது நீண்ட நாள் நடப்பதற்காக காத்திருந்த ஒரு சம்பவம்.
இதற்கு முன்பாக ஆந்திராவிலும், பெங்களூரிலும், பல நாடுகளிலும் நடந்திருக்கிறது. நான் ஏற்கனவே தெரிவித்தது போல பொது வெளிகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த கருத்துக்கள் தவறாக யாரிடமும் சேராது என்று நம்புகிறேன்.
பல ஊடகங்கள் ரசிகர்கள் மீது பழியை சுமத்துகிறது. ஆனால் ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன் எனது தந்தை இறந்த சமயத்தில் இறந்த அவரது உடலை வீடியோ எடுப்பதற்காக பல ஊடகங்கள் எங்களை பின்தொடர்ந்து வந்தன. இதனால் அங்கிருந்த அனைவரும் தங்களது உயிர்களை பணயம் வைக்க வேண்டி இருந்தது ஊடகங்களே இப்படி செய்யும் பொழுது ரசிகர்கள் தொண்டர்களையும் குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது.
நானும் குற்றத்திற்கு பொறுப்பானவன் தான். என்னிடமும் தவறுகள் உள்ளது. வாக்களிப்பது முக்கிய கடமையாக நான் பார்க்கிறேன். மக்களாகிய நாம் உரிமைகளைப் பெற கடமைகளை செய்தாக வேண்டும். எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்போர் அமைதியாக இருந்தால் நல்லது. என்றுமே விஜய்க்கு நல்லது மட்டுமே நினைத்து இருக்கிறேன், வாழ்த்தியிருக்கிறேன்.
என்னை பிடிக்காதவர்கள் நான் வேற்று மொழிகாரன் என்றே கூறுவார்கள், ஒருநாள் வரும் அப்போது என்னை தமிழன் என்று உரக்க அழைப்பார்கள். இந்த கார் ரேஸ் மூலமாக எனது நாட்டிற்கும் மாநிலத்திற்கும் நான் பெருமை சேர்க்க முழு ஆன்மாவையும் அர்ப்பணிக்கிறேன். இந்த பணியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று தெரிவித்துள்ளார்.