அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயன்- கவனத்தை ஈர்த்த கலெக்டரின் டுவிட்

doctor siva ajith flim valimai
By Jon Mar 14, 2021 01:02 PM GMT
Report

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகிறது தேர்தல் ஆணையம். இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படத்தை பயன்படுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தேர்தல் விழிப்புணர்வு பிரசார போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். '

வலிமை' படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அந்தப் படத்தின் அப்டேட் என்று கூறி ட்வீட் செய்திருந்த மாவட்ட ஆட்சியரின் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. தற்போது சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட அப்டேட் என்று கூறி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர் சிவகார்த்திகேயன், 'முகக்கவசம் அணிந்து வாக்களிக்க வாருங்கள் - டாக்டர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில் சிவகார்த்திகேயன் முகக்கவசம் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இந்த விழிப்புணர்வு போஸ்டர் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப்பார்த்த சிவகார்த்திகேயன், 'உண்மையிலேயே இது மிகவும் பொறுப்பான ஒரு செயல்தான். இதில் நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

தயவு செய்து அனைவரும் வாக்களிக்க செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்' என்று மாவட்ட ஆட்சியரின் ட்வீட்டை மேற்கோள்காட்டியிருக்கிறார்.  

சிவகார்த்திகேயனின் பதிவுக்கு பதிலளித்த ஆட்சியர் விஜயகார்த்திகேயன், 'அதான் டாக்டரே சொல்லிட்டாரே. நாம் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்வோம்' என்று கூறியுள்ளார். இந்த இருவரது ட்விட்டர் உரையாடல் சமூகவலைதளங்களில் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.