உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது : வைரலாகும் அஜித் - ஷாலினி ரொமான்டிக் க்ளிக்
தமிழ் சினிமாவில் இவர்கள்தான் சிறந்த காதல் தம்பதிகள் என்றால் அஜித்–ஷாலினி என்று கூறுவார்கள். கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் ஒன்றாக நடித்ததன் மூலம் இவர்களிடையே காதல் ஏற்பட்டது.
அதன்பின்னர் இரு வீட்டர் சம்மதத்துடன் 2000-வது ஆண்டு திருமணம் நடைபெற்றது , இந்த ஜோடிகளுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்து நேற்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

இந்நிலையில் நேற்று 23 வது ஆண்டு திருமண நிறைவு விழாவை தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளனர். அப்போது அஜித் ஷாலினியை கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படத்தை ஷாலினியின் சகோதரி ஷாம்லி வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
விடையறியா உறவுகளின் வடுக்களை சுமக்கும் கனேடிய புலம்பெயர்ந்தோர்! விஜய் தணிகாசலதின் செம்மணி அறிக்கை IBC Tamil