போனில் அழைத்த அஜித் - வெளிநாட்டில் இருந்து பிரேமலதாவிற்கு இரங்கல்..!!
தேமுதிக தலைவர் விஜய்காந்த் நேற்று காலமான நிலையில் தொலைபேசியில் அழைத்து நடிகர் அஜித் பிரேமலதாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இரங்கல் செய்தி
அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டில் இருக்கின்றார். விஜயகாந்தின் மறைவிற்கு தனது இரங்கலை அவர் மெசேஜ் மூலமாக பிரேமலதாவிற்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் இருப்பதால் இறுதி அஞ்சலி செலுத்த வர முடியவில்லை என வேதனையுடன் கூறியதாகவும் மேலும் விஜயகாந்த் மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இறுதி ஊர்வலம்
திரைப்பட நடிகரும் ,தேமுதிக தலைவருமான விஜய்காந்த் நேற்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவருக்கு தமிழ் திரையுலகமே இரங்கலை தெரிவித்து வருகின்றது.
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் போன்றோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், சென்னை தீவுத்திடலில் இருந்து பச்சையப்பன் கல்லூரி வழியாக விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகின்றது.