நடிகர் அஜித்துடன் அமீர், பாவனி - இணையதளத்தில் வைரலாகும் Chill Photos..!

Ajith Kumar Pavani Reddy Viral Photos
By Nandhini Oct 08, 2022 05:25 AM GMT
Report

அஜித்தின் 'துணிவு' திரைப்படம்

போனிகபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்திற்கு நடிகை மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் அஜித் பேங்காங்க் பறந்தார்.

'துணிவு' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இப்படம் 2023-ம் ஆண்டு பொங்கல் அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் பாங்காக்கில் ‘துணிவு’ துணை நடிகர்களுடன் Chill செய்யும் நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை பாவனி, நடன இயக்குநர் அமீர், நடிகர் சிபி புவனசந்திரன் உட்பட துணை நடிகர்கள் இதில் உள்ளனர்.