வலிமை படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் : வைரலாகும் புகைப்படம்

Ajith Valimaiupdate
By Irumporai Sep 21, 2021 10:55 AM GMT
Report

அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் கார்த்திகேயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வலிமை படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர் இணையத்தை கலக்கி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் கார்த்திகேயா. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வரும் இவர், இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்திகேயாவுக்கு, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் முகநூல் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கார்த்திகேயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘வலிமை’ படக்குழு சர்ப்ரைஸ் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கார்த்திகேயாவின் வில்லன் தோற்றத்துடன் கூடிய கிளசியான இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.