மாஸா , கிளாஸா AK ன் புதிய புதிய புகைப்படம் : வைரலாக்கும் ரசிகர்கள்
நடிகர் அஜித், ஹீமா குரோஷி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.
படத்தின் போஸ்டர்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் படத்தில் சிறப்பான லுக்கில் அஜித் காணப்படுகிறார். அவரது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலிருந்து மாறுபட்டு இந்தப் படத்தில் காணப்படுகிறார்.
Exclusive #Valimai stills ft. #AjithKumar. [Set pic.twitter.com/LXxjONX0cc
— Manobala Vijayabalan (@ManobalaV) December 28, 2021
இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் நாயகி ஹுமா குரோஷியுடன் இணைந்து அஜித் காணப்படும் புதிய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் மிகவும் ஸ்மார்ட்டான அஜித்தை பார்க்க முடிகிறது. இந்தப் புகைப்படத்தையும் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.